ராஜாவின் ராகத்தாலாட்டைப் பற்றி எழுத நினைக்கையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் போட்டி போட்டு என் முன்னாள் வந்து விழுகின்றன. அவற்றில் எதைத் தொகுத்து எழுதுவது என்பதிலே கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அனேகமாக என்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொன்னூறுகளின் இறுதிவரை... இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை என்றே சொல்லவேண்டும். அந்த கொடுத்துவைத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பின்னணியில் ராகதேவன் வயலின் வாசிப்பதுபோல ஒரு ஃபீலிங்.
நான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை குழைத்துப்பார்க்கும்போது காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் சொர்க்கமாக மாற்றிய தருணங்கள் அவை. எதோ ஒரு திருவிழா காலத்தில் எங்கள் வீட்டில் கோவிலுக்கு மாவிளக்கு வைக்க மாவிடிக்கும் பின்னணி ஓசையில் வாசலில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருக்கையில் கோவில் குழாயில் பாடிய இந்தப்பாடல் இதோ இன்றுவரை நெஞ்சுக்கூட்டுக்குள் அவள் நினைவுகளையும் சேர்த்தே இடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களே கேட்டுப்ப்பாருங்கள்....
நான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை குழைத்துப்பார்க்கும்போது காதலி
"மதுர மரிக்கொழுந்து வாசம்... என் ராசாத்தி உன்னுடைய நேசம்......
இசையினால் மழை பொழியும்.. இரும்பும் உருகும் இவையெல்லாம் பெரிதல்ல.. மனிதனின் மனம் உருகவேண்டும்.. ஏனென்றால் மனித மனம் நினைத்த மாத்திரத்தில் வேற்று
"ஜனனி..ஜனனி... ஜகம் நீ அகம் நீ...
சில சமயம் நினைத்துப்பார்ப்பேன். அவர் ஜீவ சமாதி ஆன அந்த நேரத்தில் நான் அங்கு இருந்து அதை பார்த்திருந்தால் என் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று. அதே காட்சி ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும். காட்சி என்று பார்த்தால் அது ஒரு படத்தில் வரும் காட்சி அவ்வளவுதான். ஆனால் அதற்கு இளையராஜா கொடுத்திருப்பார் பாருங்கள்... ஒரு உணர்வுப்பூர்வமான இசை.. நான் அந்த நேரத்தில் அங்கு இல்லையே என்ற குறையை இந்த இசை பிரவாகத்தின் மூலம் தீர்த்து வைத்தார் ராஜா. அந்த பாடலில் வரும் " குருவே சரணம்... குருவே சரணம்...." என்ற வரிகளை உச்சரிக்கும்போது ஸ்ரீராகவேந்திரரின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதுபோ
" குருவே சரணம்... குருவே சரணம்..
ராஜாவின் இசையோடு கலந்த எனது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....

